Wednesday, April 1, 2009

Some tamil poetries scribbling

யார் சொன்னார்கள் இரவில் சூரியன் வராது என்று
எங்கள் வீட்டுக்கு வந்தது
ஒளிமயமாகவும் ஒலிமயமாகவும்
தாயாய் , சகோதரியாய்,குழந்தையாய்
சந்தோசமாய் சுற்றியது....இப்போது
செயற்கை ஒளியில் இருக்கிறோம்
இயற்கை ஒளி எபோது வரும் என்று
எங்கள் அன்பு மகளை ஊருக்கு வழி அனுப்பிவிட்டு!!!!!


காதல் ஒருவனை கைப்பிடித்து
மணவறையில் மணம்முடித்து
புகுந்த வீடு வந்தால் பெண்
வந்ததும் கணவனிடம் சொன்னால்
தந்தையாகவும் தாயாகவும் நான் இருக்க
உன்தந்தையும் தாயும் எதற்கு என்று
அவனும் அதையே சொன்னான் அவளிடம்
கோபம்கொண்டு தாயகம் திரும்பினாள்
இங்கு ஆணுக்கு ஒரு நியாயம்
பெண்ணுக்கு ஒரு நியாயம் தான்
பாரத நாட்டில் பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை
என்று யார் சொன்னார்கள் ?!!



கனவுகள் கண்டிருக்கிறேன்
வானத்து நீலத்தை எடுத்து
அழகான கவிதை ஒன்றுவரைய வேண்டும் என்று
கனவுகள் கண்டிருக்கிறேன்
அற்புதமான கதை ஒன்றை
எழுதவேண்டும் என்று
கனவுகள் கண்டிருக்கிறேன்
வார்த்தைகள் என் நாவில்
விளையாட வேண்டும் என்று
ஒன்றுமே என்னை கேளாமல்
அவர் கொடுத்தார்
அழகான காவியமான என் வாழ்வில்
அற்புதமான கதையாக என் கணவரையும்
அழகிய வார்த்தைகளாக என்
தங்க மகளையும் ....
கனவுகளை விட எனக்கு
நிஜங்கள் சுவையானவையே என்றென்றும்....

என் மடியில் குழந்தையாய்
நீ விழுந்த போது உன்
கள்ளமில்லா சிரிப்பை ரசித்தேன் வியந்தேன்
பின் என் விரல் பிடித்து
நீ மழலை பேசி நடந்த போது
உன் பேச்சினை ரசித்தேன் வியந்தேன்
வளர்ந்த பின் உன் பயன்களை கூறி
நீ அழும்போதும் மீண்டும் போராட
எழும் உன் மனோதிடத்தை
ரசித்தேன் வியந்தேன்....
நான் என்றும் பதிலை நின்றேன்
உன் ஓயாத கேள்விகளுக்கு
உன் கேள்விகளை கேட்டு ரசித்தேன்
இப்போது வளர்ந்து குமரியாய் நிற்கிறாய்
இன்றும் ரசிக்கிறேன் வியக்கிறேன்
உன் மனதிடத்தை உன் ஓயாத உழைப்பை
உன் உதவும் திரத்தை கண்டு
thaayaga அல்ல ஒரு manaviyaaga
இப்போது vazhaiyin padathirku
badhilaai நீ nirkirai naan kelviyaai
ipodhum வியக்கிறேன் எனக்கும் evalavu
azhaiya மலர் எப்படி வந்தது என்று ....


No comments: